பீஜிங்கில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று - இரண்டாம் அலை தொடக்கமா ?
சீன தலைநகர் பீஜிங்கில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 வயதான ஆண் ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். பீஜிங்கில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ஒருவருக்கு தொற்று உறுதியானதால், இரண்டாவது கொரோனா அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் மருத்துவர்களுக்கு எழுந்துள்ளது.
Next Story