ரஷ்யாவில் வரும் மே 11 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ரஷ்யாவில் வரும் மே 11 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார். மே மாதம் மத்தியில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் வரும் மே 11 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்தவண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் ஆறாயிரத்து 411 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ரஷ்யாவில் கொரோனாவுக்கு இதுவரை 867 பேர் பலியாகி உள்ளனர்.  சீனா மற்றும் ஈரானை பின்னுக்கு தள்ளி, கொரோனா பாதிப்பில் உலக பட்டியலில் எட்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் ஊரடங்கு மே மூன்றாவது வாரத்தில் இருந்து படிப்படியாக தளர்த்தப்படும் எனஅதிபர் புதின் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாடு 3 லட்சம் கோடி ரூபாய் செலவிட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்