"வட கொரிய அதிபர் இறந்துவிட்டார் ?" - ஹாங்காங் ஊடகம் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்று வெளியான செய்தி உலகளவில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட வட கொரிய அதிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஹாங்காங் ஊடகம் ஒன்று வட கொரிய அதிபர் இறந்துவிட்டார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டு குழப்பங்களை மேலும் அதிகரித்துள்ளது. முன்பை போல் இந்த செய்தியையும் வட கொரிய அரசு மறுத்து செய்தி வெளியிடவில்லை. இந்த செய்தியை அண்டைய நாடுகளான சீன, ஜப்பான் மற்றும் தென் கொரிய ஊடகங்களால் கூட உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது தொடர்ந்து மர்மமாகவே நீடிக்கிறது.
Next Story

