"கடுமையான மந்த நிலையில் உலகப் பொருளாதாரம்" - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை

உலக பொருளாதாரம், தற்போது , "கடுமையான மந்த நிலைக்கு" செல்வதாக சர்வதேச செலவணி நிதியம் தெரிவித்துள்ளது. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு
கடுமையான மந்த நிலையில் உலகப் பொருளாதாரம் - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை
x
* கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்பே உலக பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தது என்றும், தற்போது 2020ல் "கடுமையான மந்தநிலையை" சந்திக்க உள்ளதாகவும் சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா எச்சரித்துள்ளார்.

* தற்போதைய நெருக்கடி, வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

* சர்வதேச செலவாணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர வசந்த கால கூட்டத்தின் போது உரையாற்றிய அவர்,  இந்த ஆண்டின் முதல் பாதியில், உலகளாவிய பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

* உலகப் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ள நிலையில், நாடுகளிடையே புவிசார் அரசியல் பதட்டங்கள் ஏற்படும் என்றும்,  ஏற்கனவே வர்த்தக மோதல்கள் இருந்து வரும் நாடுகளிடையே, கொள்கை மாற்றங்கள் மற்றும்  வர்த்தக சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

* தொற்றுநோய் பரவும் தன்மை மற்றும் பரவும் வேகம் காரணமாக, கால வளர்ச்சி கணிப்புகளில் நிச்சயமற்ற தன்மை உள்ளது.

* பயணத் தடைகள் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கை காரணமாக நீண்டகால வளர்ச்சியிலும் தாக்கம் ஏற்படும்.

* சர்வதேச விநியோக சங்கிலியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது, அந்நிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளதுடன்,  மூலதன பற்றாக்குறை, இறுக்கமான நிதி நிலைமை ஏற்பட்டுள்ளன என்றும் ஜார்ஜிவா கூறினார்.  

* நடப்பாண்டின் முதல் பாதியில் பெரிய அளவிலான நெருக்கடி தவிர்க்க முடியாதது என்றும், நோய் கட்டுப்படுத்தும்  முயற்சிகளில் காட்டப்படும் தீவிரம், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதில் முன்னேற்றம் காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

* விநியோக தொடர்பில் காணப்படும் இடையூறுகள், செலவு முறைகளில் மாற்றங்கள், நிதி நிலைமைகளைப் பொறுத்து பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார் .

* எனினும், மூன்றாம் காலாண்டில் இருந்து  சர்வதேச பொருளாதாரம் மீளத் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும்  ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்