கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்ப்பது ஏன்?
கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்த்து வருகிறது. அங்கு நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* முதன் முதலாக கடந்த ஜனவரி 20-ம் தேதி கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவியது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்நாட்டின் 50 மாகாணங்களிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொடிய வைரஸ் நிலைநாட்டி உள்ளது.
* சர்வதேச அளவில் அமெரிக்காவில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
* அங்குள்ள மாகாணங்களில், நியூயார்க்கில் இந்த வைரஸ் கோரதாண்டவமாடி வருகிறது. அங்கு கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளை விட நியூயார்க் மாகாணத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது.
* நியூயார்க் நகரில் மட்டுமே 81 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. நியூயார்க்கில் மட்டும் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது.
* இதேபோல் நியூஜெர்சி மாகாணத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
* மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, மசாசூசெட்ஸ், பென்சில்வேனியா, புளோரிடா, இல்லினாய்ஸ், ஜார்ஜியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
* தலைநகர் வாஷிங்டனில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டிப்பிடிக்கும் நிலை உள்ளது.
* கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநாட்டு அரங்குகள், தேவாலயங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது
* அங்கு பலியானவர்களின் உடல்களை வைப்பதற்கு பிணவறைகளில் இடமின்றி, லாரிகளில் போட்டு, பின்னர் இறுதிச்சடங்குக்கு கொண்டு செல்கிற நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story

