மக்கள் மனதில் இடம் பெற்ற ஆங்கிலேய அதிகாரி

தற்போது மக்களை பீதியடைய செய்துள்ள கொரோனாவை போல, 1800களின் முற்பகுதியில் மக்களை ஆட்டிப்படைத்த நோய் காலரா... அப்போது மக்களுக்காக சேவை ஆற்றி, காலராவால் உயிரிழந்தவர் தாமஸ் மன்றோ... அவர் குறித்து தற்போது பார்க்கலாம்...
மக்கள் மனதில் இடம் பெற்ற ஆங்கிலேய அதிகாரி
x
* சென்னை தீவுத்திடலுக்கு அருகே மவுண்ட் ரோடில் ஒரு குதிரையின் மீது கம்பீரமாக ஒரு ஆங்கிலேயர் அமர்ந்திருப்பார்... அவர் தான் தாமஸ் மன்றோ..
 
* மோசமான ஆங்கில ஆட்சியர் மத்தியில், மக்களுக்கு நம்பிக்கை தந்த பல்வேறு நல்ல விஷயங்களை செய்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர்...

* பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றி, ஆட்சியராக உயர்ந்து, மெட்ராஸ் மாகாண ஆளுநராக பதவி உயர்வு பெற்றவர் மன்றோ...

* விவசாயிகளின் நில உரிமையை அவர்களுக்கே அளித்து, அவர்களிடம் நேரடியாக வரி வசூல் செய்யும் 'ரயத்வாரி' சீர்திருத்த முறையை கொண்டு வந்து விவசாயிகளின் கடவுளானவர் மன்றோ...

* அதிகாரிகளால் நடைபெறும் மத மாற்றத்தை கடுமையாக எச்சரித்து, ஒழித்தவர்.. அப்படி ஆந்திராவில் ஒரு அதிகாரி மக்களை மத மாற்றம் செய்ய முயற்சித்த போது, அந்த அதிகாரியையே பணி நீக்கம் செய்தவர்...

* ஐரோப்பிய அதிகாரிகளை விட உள்ளூர் மக்களே நிர்வாகத்தில் அதிகமிருக்க வேண்டுமென விரும்பியவர்... 

* இவரின் செயல்களால், ஆந்திர மக்கள் தங்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு, 'மன்றோலப்பா' எனப் பெயர் சூட்டி அழகு பார்க்கும் அளவுக்கு மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர்...

* 1827ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்று லண்டன் செல்ல இருந்த நிலையில், நாடு முழுவது காலரா நோய் பரவி வந்தது... 

* இதை அறிந்த அவர் பணியாற்றிய பகுதிகளை பார்க்க விரும்பினார்.. காலரா நோய் இருந்ததால் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட போதும், நோய் தாக்கிய மக்களை பார்த்தே ஆவேன் என பிடிவாதமாக சென்றுள்ளார்..

* அப்படி அவர், ஆந்திராவில் உள்ள பட்டிகொண்டா என்ற பகுதிக்கு சென்றிருந்த போது, அவரும் காலராவால் தாக்கப்பட, 1827ம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி காலமானார்.

* அவரின் உடல் 'கூட்டி' என்ற இடத்திலுள்ள ஆங்கிலேயர்களின் கல்லறையில் புதைக்கப்பட்டது. 

* இந்த செய்தியை அறிந்த மெட்ராஸ் மக்கள் ஒன்று கூடி இணைந்து, நிதி வசூலித்து அவருக்கு சிலை செய்தனர். 1839ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி இந்த சிலை தீவுத்திடலில் திறக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்