குடியரசுத்தலைவர் மாளிகையில் டிரம்பிற்கு இரவு விருந்து - பல்வேறு மாநில முதல்வர்கள், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்பு

டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
குடியரசுத்தலைவர் மாளிகையில் டிரம்பிற்கு இரவு விருந்து - பல்வேறு மாநில முதல்வர்கள், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்த டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோரை  ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். பின்னர் மாளிகை குடியரசுத்தலைவர் ராமநாத்கோவிந்த் சுற்றிக்காட்டினார். அப்போது, ராம்நாத் கோவிந்த் மற்றும் டிரம்ப் கூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதை தொடர்ந்து இரவு, டிரம்ப் தம்பதிக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மட்டுமின்றி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்