கொரோனோ வைரஸ் மருந்து கண்டறியும் ஆஸ்திரேலிய மருத்துவ குழுவுக்கு இந்திய மருத்துவர் தலைமை
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் தலைமை தாங்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் தலைமை தாங்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பினால், இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறிய உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் முதற்கட்ட முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மருத்துவ குழுவுக்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட எஸ்.எஸ். வாசன் என்கிற மருத்துவர் தலைமை தாங்கி வருகிறார். இவர் ஏற்கெனவே டெங்கு, ஸிகா, சிக்கன்குனியா உள்ளிட்ட நோய்களுக்கும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story