கொரோனா வைரஸ் எதிரொலி - உதிரிபாகம் தயாரிப்பு முடக்கம்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி, சீனாவின் உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலி - உதிரிபாகம் தயாரிப்பு முடக்கம்
x
* சீனாவின் வூகான் பகுதியில் உற்பத்தியான கொரோனா வைரஸ் பாதிப்பு தொழில் மற்றும் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

* செல்போன், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உதிரிபாக தயாரிப்பில் சீன நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. 

* ஆனால், சீன வருட பிறப்பிற்காக விடுமுறை அறிவித்த நிறுவனங்கள், கொரோனா எதிரொலியால், விடுமுறையை நீட்டித்துள்ளன. இதனால், மின்னணு சாதன உதிரிபாக உற்பத்தி நின்றுள்ளது. 

* உதிரிபாகம் இல்லாமல் உலகளாவிய முறையில், அந்த நிறுவனங்களை நம்பியுள்ள செல்போன் மற்றும் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் முடங்கி உள்ளன. 

* கொரோனா வைரஸ் பாதிப்பால் சீன பங்கு சந்தைகள் அனைத்தும் வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், நுழைவு வாயிலான ஹாங்காங், எல்லை வழி நுழைவை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலுமாக சரிந்துள்ளது. 

* இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்துள்ளது, அந்தந்த நாடுகளின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
* ஏற்கனவே, அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிலவி வரும் நிலையில், சீனாவுக்கு கொரோனா மற்றொரு அடியாகியுள்ளது.

* பங்குகளை வாங்க யாரும் முன்வராத நிலையில், விற்கவும் முடியாமல் தவித்துள்ள சீனாவில், உணவகம், நட்சத்திர விடுதிகள், சுற்றுலா தலங்கள், வர்த்தக அங்காடிகள் உள்ளிட்டவை வெறிச்சோடி உள்ளன. 

* உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சீனா, பல்வேறு வகையிலும் பேரிடியை சந்தித்து, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்