அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் : 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு, அவசர நிலை பிரகடனப்படுத்தி உள்ளது.
அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் : 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
x
வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் 15 நாடுகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியது.இதையடுத்து உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை பிரகனப்படுத்தி உள்ளது.

சீனா தவிர்த்து 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் 5 முறை, அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. 16 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ள உலக சுகாதார அமைப்பு, அந்த குழு கொரோனா வைரஸை கட்டுப்படும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்