3 லட்சம் மக்கள் தொகை கொண்ட போகன்வில் : தனி நாடாக விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்

கைலாசா என்ற நாட்டை நித்தியானந்தா உருவாக்கி வருகிறார் என்ற செய்திகள் ஒருபுறம் இருக்க நிஜமாகவே போகன்வில் என்ற புதிய நாடு விரைவில் உதயமாக இருக்கிறது.
3 லட்சம் மக்கள் தொகை கொண்ட போகன்வில் : தனி நாடாக விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்
x
பல தீவுகளை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நாடு பப்புவா நியூ கினியா. இந்த நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது தான் போகன்வில். ஆஸ்திரேலியாவின் வசம் இருந்த பப்புவா நியூ கினியாவில் இருந்து போகன்வில்லை தனியாக பிரிக்க வேண்டும் என 1975 ஆம் ஆண்டே கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் தங்கம் மற்றும் காப்பர் சுரங்கங்கள் நிரம்பிய போகன்வில்லை தனி நாடாக அறிவிக்க தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வந்தது. 

* ஆனால் பொருளாதார சுரண்டலுக்காக தங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 1988ல் உள்நாட்டு போர் மூண்டது. தொடர்ந்து ஒரு நாட்டுக்காக 10 ஆண்டுகள் நடந்த போரில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 

* 20 ஆண்டுகளில் தனி நாடாக அறிவிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என 2001ல் உறுதியளிக்கப்பட்டது. அதன் பேரில் போகன்வில்லில் வசித்து வந்த மக்களிடம் பல்வேறு கட்டங்களாக கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது. 

* அப்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேரில் 98 சதவீதம் பேர்  போகன்வில்லை தனி நாடாக அறிவிக்க கோரி வாக்களித்தனர். இதையடுத்து போகன்விலுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தனி நாடாக அறிவிக்கப்பட உள்ளது. 

* தற்போது 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு 8 ஆயிரத்து 990 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதற்கு முன் 2017ல் புட்டோ ரிக்கோ, குர்திஸ்தான், கேட்டலோனியா உள்ளிட்ட நாடுகள் தனிநாடாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது போகன்வில் தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட உள்ளது. 

* 195 நாடுகள் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக உள்ள நிலையில் புதிதாக அறிவிக்கப்படும் போகன்வில் 196வது நாடாக உருவாகும் என்றும், உலகின் மிகச்சிறிய நாடு என்ற சிறப்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது... 


Next Story

மேலும் செய்திகள்