கர்தார்பூருக்குச் செல்லும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் - மத்திய அரசு

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தகவல்
கர்தார்பூருக்குச் செல்லும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் - மத்திய அரசு
x
கர்தார்பூர் சாலையை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை 9ம் தேதி திறந்து வைக்கிறார். இதனிடையே, கர்தார்பூரில் உள்ள குருத்வாராவிற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் செல்ல  பாஸ்போர்ட் தேவையில்லை என இம்ரான் கான் அறிவித்தார். ஆனால், அதனை ஏற்க அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் குருநானக் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும் என திடீரென அறிவித்துள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்