இலங்கையில் வரும் நவம்பர் 16-ல் அதிபர் தேர்தல் : ராஜபக்ச சகோதரர் போட்டியிடுவதில் சிக்கல்

அக்டோபர் 7 ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்
இலங்கையில் வரும் நவம்பர் 16-ல் அதிபர் தேர்தல் : ராஜபக்ச சகோதரர் போட்டியிடுவதில் சிக்கல்
x
தேர்தல் அறிவிப்பை அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் 
ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜே.வி.பி உள்ளிட்ட சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பாக ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே  போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ ஆவணம் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய அதிபர் சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்