தெற்காசியாவின் மிகப்பெரிய தாமரை கோபுரம் திறப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்
தெற்காசியாவின் மிகப்பெரிய தாமரை கோபுரம் திறப்பு
x
இலங்கை தலைநகர் கொழும்புவில், தெற்காசியாவிலேயே மிக உயரமானதாக கருதப்படும் தாமரைக் கோபுரம் மக்கள் பார்வைக்காக, அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில்  திறந்து வைக்கப்பட்டது. சுழலும் வர்த்தக நிலையங்கள், கலை அரங்கு ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட கோபுரம், 356 புள்ளி 3 மீட்டர் உயரத்துடன், உலகின் 19ஆவது பெரிய கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.  6 அதிசொகுசு அறைகளும், தாமரை மலரின் இதழ் போன்ற பகுதியில் 8 மாடிகள் அமைந்துள்ளதுடன், ஆறு மற்றும் ஏழாம் மாடிகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகரின் அழகை ரசிக்கும்  வகையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்