"மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் நடைபெற கூடும்" - இம்ரான் கான்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவான 370-யை, ரத்து செய்வதன் மூலம் இந்தியா மீண்டும் புல்வாமா போன்ற தாக்குதல்களை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் நடைபெற கூடும் - இம்ரான் கான்
x
பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசிய அவர், புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டியது போல் இதற்கும் இந்தியா, பாகிஸ்தானையே குற்றம்சாட்ட கூடும் என்று  குறிப்பிட்டார். இனவெறி சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் பாஜக அரசு, சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதாக குற்றம்சாட்டிய அவர், இதனால் தான் பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.  போரினால் யாருக்கும் எந்த பயனும் கிடைக்காது என்று தெரிவித்த அவர்,  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஐ.நா.விடம் முறையிடும் என்றும்  காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச தலையீடு அவசியம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்