"கப் கொண்டுவந்தால் 30% தள்ளுபடி" - டீ கடை உரிமையாளரின் புதிய முயற்சி

கம்போடியாவின் கம்போங் ஸ்பெயூ மாகாணத்தில், குப்பைகளால் அலங்காரம் செய்யப்பட்ட டீக்கடை ஒன்று அப்பகுதி மக்களிடையே, மிகவும் பிரபலமடைந்துள்ளது
கப் கொண்டுவந்தால் 30% தள்ளுபடி - டீ கடை உரிமையாளரின் புதிய முயற்சி
x
கம்போடியாவின் கம்போங் ஸ்பெயூ மாகாணத்தில், குப்பைகளால் அலங்காரம் செய்யப்பட்ட டீக்கடை ஒன்று அப்பகுதி மக்களிடையே, மிகவும் பிரபலமடைந்துள்ளது. வாண்டே என்பவர் பீர் பாட்டில்களை வைத்து, அவரது டீக்கடைக்கு சுவர் உருவாக்கியுள்ளார்.  அதேபோல, அங்கு கிடக்கும் காய்ந்த இலைகளை கொண்டு, ரப்பீஸ் கஃபே என கடையின் பெயரை அலங்கரித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, அங்கு காபி குடிக்கும் வாடிக்கையாளர்கள், பணத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் கப்களை கொடுத்துவிட்டு செல்கின்றனர். காபி குடிப்பதற்கு கப் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடையில் 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்