சீனாவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட விமான நிலையம்
சீனத் தலைநகர் பீஜிங்கில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்சிங் விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக கருதப்படுகிறது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்சிங் விமான நிலையம், உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக கருதப்படுகிறது. 14 லட்சம் சதுர மீட்டர் நில பரப்பளவில் பிரமாண்டமான கட்டடங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த விமான நிலையத்திற்கு பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வழிகாட்டவும், உதவிடவும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ள இந்த விமான நிலையத்தில் பல புதுமையான வசதிகள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு 7 கோடியே 20 லட்சம் பயணிகள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Next Story