புலிகளின் தங்க புதையலை தோண்ட முயற்சி : பெண் உள்பட 14 பேர் கைது
முல்லைத்தீவு அருகே புலிகளின் தங்க புதையலை தோண்ட முயன்றதாகக் கூறி பெண் உள்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் ஒரு குழு புதையில் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், அந்த குழுவை சுற்றி வளைத்தனர். பெண் உள்பட 14 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நிலத்திலிருந்து பொருட்கள் கண்டறியும் கருவி, கேமிரா, மடிக்கணினி மற்றும் 3 சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைதானவர்கள், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, தம்புள்ள, மாத்தளை, சாவகச்சேரி, கலேவெல போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைதிகளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறை, அவர்களை சிறையில் அடைத்தனர்.
Next Story