ஜி.20 மாநாடு : ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார் பிரதமர் மோடி

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார்.
ஜி.20 மாநாடு : ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார் பிரதமர் மோடி
x
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார். அப்போது, இரண்டாவது முறையாக, மீண்டும் இந்தியாவின் பிரதமராக வெற்றி பெற்ற மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமது இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பிரதமரிடம், ஷின்சோ அபே கூறினார். இந்த சந்திப்பின் போது, ஜப்பான் உடனான இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டது. பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களும், இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன.

Next Story

மேலும் செய்திகள்