மழை தான் சென்னையைக் காப்பாற்ற வேண்டும் - லியோனார்ட் டிகாப்ரியோ

மழை தான் சென்னையை காப்பாற்ற வேண்டும் என்று பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்ட் டிகாப்ரியோ கூறிய சில மணி நேரத்திலேயே சென்னையில் மழை வெளுத்து வாங்கியது.
மழை தான் சென்னையைக் காப்பாற்ற வேண்டும் - லியோனார்ட் டிகாப்ரியோ
x
1997ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தில் நடித்து உலக புகழ் பெற்றவர் லியோனார்ட் டிகாப்ரியோ.JACK என்ற கதாபாத்திரத்தில் ரோஸ் உடன் ரொமான்ஸ் செய்து தனக்கென ரசிகர் பட்டாயத்தை உருவாக்கியவர், டிகாப்ரியோ.டைட்டானிக் படத்தில் அவர் வைத்திருந்த HAIRSTYLE பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டானது.டிகாப்ரியோவுக்கு இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.. தொடர்ந்து அவர் நடித்த CATCH ME IF YOU CAN, SHUTTER ISLAND, THE WOLF OF WALL STREET, INCEPTION உள்ளிட்ட படங்கள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது.வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நடித்தாலும், டிகாப்ரியோவுக்கு 2015ஆம் ஆண்டில் வெளியான THE REVENANT படத்தில் நடித்தற்காக தான் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. பல ஆண்டு உழைப்புக்கு பிறகு விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சியோ, கொண்டாட்டத்தையோ டிகாப்ரியோ ஆஸ்கர் மேடையில் வெளிக்காட்டவில்லை. மாறாக, சுற்றுச்சூழல் மாசு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்தே கையில் விருதுடன் டிகாப்ரிக்கோ பேசினார்.அந்த அளவிற்கு சமூகத்தின் மீது அவருக்கு அக்கறை.புகழின் உச்சியை தொட்ட உடனே சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து தன்னார்வ நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட டிகாப்ரியோ, காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.டி காப்ரியோவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் பருவநிலை மாற்றத்திற்கான தூதராக நியமித்து அழகு பார்த்தது, ஐ.நா.பருவநிலை மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாலயே சென்னையில் மழை பொய்த்து போனதால் மக்கள் படும் பிரச்சினைகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிகாப்ரியோ பதிவிட்டுள்ளார்.டிகாப்ரியோவின் இந்த பதிவு மூலம் சென்னையின் குடிநீர் பிரச்சினை உலகின் கவனத்தை பெற்றுள்ளது..

Next Story

மேலும் செய்திகள்