இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை - சிறிசேன அறிவிப்பு

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை - சிறிசேன அறிவிப்பு
x
இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.சமீப காலமாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கருதிய அதிபர்  சிறிசேன, அந்த கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்தார்.அதன்படி, 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் கோப்புகளில், தற்போது அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.இலங்கையில், கடைசியாக 1976 ஆம் ஆண்டில் கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்