இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் எதிரொலி : ஒன்பது இஸ்லாமிய அமைச்சர்கள் ராஜினாமா

இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகித்த ஒன்பது இஸ்லாமிய அமைச்சர்களும் ஒட்டு மொத்தமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் எதிரொலி : ஒன்பது இஸ்லாமிய அமைச்சர்கள் ராஜினாமா
x
இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இலங்கை அரசியலில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.குற்றவாளிகளுக்கு உதவியதாக, அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்த, இரண்டு அமைச்சர்கள் மீது புத்த பிக்குகள் குற்றஞ்சாட்டினார்.அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, இஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அதுரலிய ரத்ன தேரர் என்ற புத்த பிட்சு, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.இந்த நிலையில், இலங்கை மத்திய அரசில் இருந்து நான்கு கேபினட் அமைச்சர்கள், நான்கு ராஜாங்க அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் என 9 இஸ்லாமிய அமைச்சர்களும், ஒட்டு மொத்தமாக பதவி விலகியுள்ளனர்.மேலும், இஸ்லாமிய உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து, ஒரு மாதத்தில், விசாரணை நடத்தி, தீர்வு காண வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.அதுவரை எம்.பி.க்களாக தொடரப் போவதாக மூத்த அமைச்சர் ரவூஃப் ஹக்கீம், தெரிவித்துள்ளார்.இலங்கையில், ஒட்டுமொத்தமாக, ஒன்பது இஸ்லாமிய அமைச்சர்கள், ராஜினாமா செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்