இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் 4 பேரின் புகைப்படங்களை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு
x
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக,  இலங்கை அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், குண்டு வெடிப்பில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் படங்களை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். தீவிரவாதிகள் குறித்த விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, குருனேகலா மாவட்டத்தில் உள்ள கோட்டம்பிட்டியா நகரில் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகள் மற்றும் மசூதிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.  இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 1983ம் ஆண்டில் இலங்கை ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைவு கூர்ந்துள்ள ராஜபக்சே, மீண்டும் ஒரு கருப்பு ஜூலை சம்பவம் நிகழ இடம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளா​ர்​.

Next Story

மேலும் செய்திகள்