விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - 2 குழந்தைகள் உள்பட 41 பேர் மரணம்

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - 2 குழந்தைகள் உள்பட 41 பேர் மரணம்
x
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் விமானத்தில் ஏற்பட்ட தீ  விபத்தில் 41 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாஸ்கோவில் இருந்து, ரஷ்யாவின் Murmansk பகுதிக்கு சென்ற, ஏரோகிராப்ட் விமானத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசர அவசரமாக விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கிய சில நிமிடங்களில், விமானத்தின் எஞ்சின் பகுதி தீ பற்றி எரிந்த‌து. இதனால், அவசர பாதை வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில், 2 குழந்தைகள் உள்பட 41 பயணிகள், தீயில் கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்தனர். அவசர பாதை வழியாக , 37 பயணிகள் உயிர்தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்