தங்க மங்கை கோமதிக்கு தங்கம் வழங்கி கத்தார் ரஜினி மக்கள் மன்றம் கெளரவிப்பு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைக்கு சேர்த்த தங்க மங்கை கோமதிக்கு, கத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தங்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
தங்க மங்கை கோமதிக்கு தங்கம் வழங்கி கத்தார் ரஜினி மக்கள் மன்றம் கெளரவிப்பு
x
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைக்கு சேர்த்த தங்க மங்கை கோமதிக்கு, கத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தங்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப்பிரிவில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். வறுமையை வென்று, சாதனை படைத்த திருச்சியை சேர்ந்த கோமதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கத்தார் ரஜினி மக்கள் மன்றமும், கோமதிக்கு தங்க நகையை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து, போட்டியில் வென்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கோமதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்