5 ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் : தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குழப்ப நிலை

மே 9 ஆம் தேதி அதிகாரபூர்வ முடிவு - தேர்தல் ஆணையம்
5 ஆண்டுகளுக்கு பிறகு  ஜனநாயக முறைப்படி தேர்தல் : தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குழப்ப நிலை
x
தாய்லாந்தின் 500 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 90 சதவீத வாக்கு எண்ணிக்கை  நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய பிரதமரான பிரயாட் சான் ஓசாவின் ராணுவ கட்சி 96 இடங்களையும், எதிர்கட்சியான   தக்‌ஷின் ஷினவத்ராவின் பெகு தாய் கட்சி  136 கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  "பாப்புலர் ஓட்" என்று அழைக்கப்படும் சிறப்பு வாக்குகளை ராணுவ கட்சியே அதிகப்பெற்று இருப்பதாக கூறப்படுவதால், தாய்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வருகின்ற  மே 9 ஆம் தேதி தான் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்