இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 21 வயது கெய்லி ஜென்னர்

அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனர் கெய்லி ஜென்னர்...
இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 21 வயது கெய்லி ஜென்னர்
x
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் நிறுவனம், 2019 ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அந்த பட்டியலில் மொத்தம் 106 இந்திய கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு 19 வது இடத்தில் இருந்து முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு, 50 பில்லியன் டாலருடன் முகேஷ், 13 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

விப்ரோ நிறுவனத்தலைவர் அசீம் பிரேம்ஜி 36 வது இடத்திலும், ஹெச்.சி.எல்.நிறுவனத்தலைவர் சிவ் நாடார் 82 வது இடத்திலும், லட்சுமி மிட்டல் 91 வது இடத்திலும் உள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச அளவில், அமேசான் நிறுவனத்தலைவர் ஜெப் பெசாஸ் 131 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். 

இதே போல், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸ், 96 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வாரன் பஃபெட் 82 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், 3 வது இடத்திலும் உள்ளார்

பேஸ்புக் நிறுவனத்தலைவர் மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட, 17 சதவிகிதம் சரிந்து, 62 பில்லியன் டாலராக உள்ளதால், அவர் எட்டாவது இடம் பிடித்துள்ளார்.

இதே போல், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில், இளம் கோடீஸ்வர்கள் பட்டியலில், 21 வயது இளம்பெண் கெய்லி ஜென்னர் இடம்பிடித்துள்ளார். அழகு சாதன பொருட்கள் நிறுவன தலைவரான இவரது சொத்து மதிப்பு தொள்ளாயிரம் மில்லியன் டாலர் என, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க்ஸ் ஜூகர்பர்க், தமது 23 வது வயதில் இளம் கோடீஸ்வரர் உலக பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால் கெய்லி, அவரது சாதனையை முறியடித்து 21 வயதிலேயே இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்