புகார் கொடுக்க வந்த பெண் மீது தாக்குதல் - சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ

கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய எஸ்.ஐ.
புகார் கொடுக்க வந்த பெண் மீது தாக்குதல் - சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ
x
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புகார் கொடுக்க வந்த பெண்ணை காவல் உதவி ஆய்வாளர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக குமாரசாமி லே அவுட் காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் தனது மகள்களுடன் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் உதவி ஆய்வாளர் ரேணுகய்யா, புகாரை பெற்றுக் கொள்ளாமல் அந்த பெண் மீது தாக்குதல் நடத்தி வெளியே அனுப்பியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்