இந்தோனேஷியாவில் 'சுனாமி' தாக்குதல் : 168 பேர் பலி-600க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதல் : 168 பேர்  பலி-600க்கும் மேற்பட்டோர் காயம்
x
இந்தோனேசியாவின் சண்டா ஸ்டெரெய்ட் பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை  திடீரென வெடித்து சிதறியது. எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளிவந்த நிலையில்,  சுனாமி ஏற்பட்டது. பட்டாகிலாங், செலாங் பகுதியில் ஆழிப்​பேரலை தாக்கியதில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். 600 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஏராளமானோர் மாயமாகியுள்ளதால் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. செராங், மற்றும் பண்டேக்லங் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றும் துண்டிக்கப்பட்டுள்ளது. நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்