நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்

இலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்
x
கிருஸ்துமஸையொட்டி இலங்கை மன்னாரில் நடைபெற்ற விழாவில் அதிபர் சிறிசேனா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் நிலவ கிறிஸ்தவ மத போதனைகள் மிக முக்கியமானது என்று கூறினார்.சமாதானத்திற்காக அனைவரும் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். இலங்கையில் நீண்ட காலமாக போர் நடைபெற்றதால் சமாதானம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்தார்.  வரும் காலத்தில் இதுபோல் நடக்க கூடாது என்று தாம் பிரார்த்திப்பதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்