விண்ணில் ஏவப்பட்டது 'ஜி சாட்-11' செயற்கை கோள்...

அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்ட ஜி சாட் - 11 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்டது ஜி சாட்-11 செயற்கை கோள்...
x
இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 செயற்கை கோளை, 'இஸ்ரோ' வடிவமைத்தது. இந்த செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2 மணி 7 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த 30 நிமிடங்களில், ஜிசாட் செயற்கைகோள் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்