"ஜனநாயகத்தை காக்க பொதுத்தேர்தல் ஒன்றே வழி" - மகிந்த ராஜபக்சே தகவல்

இலங்கையில் ஜனநாயகத்தை காக்க பொதுத்தேர்தல் ஒன்றே வழி என முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை காக்க பொதுத்தேர்தல் ஒன்றே வழி - மகிந்த ராஜபக்சே தகவல்
x
ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், வேட்பு மனு தாக்கல் செய்ய தேதி அறிவிக்கப்பட்டது போல், திட்டமிட்டமிட்ட படி அனைத்தும் நடந்திருந்தால் நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். பலவீனப்படுத்தப்பட்ட பாராளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும் என தெரிவித்த ராஜபக்சே, நாட்டின் இறையாண்மை என்பது பாராளுமன்றத்திடம் இல்லை எனவும், அவை மக்களிடம்தான் உள்ளது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்