செய்தி வாசிக்கும் ரோபோக்கள் : உலகிலேயே முதல் முறையாக சீனா அறிமுகம்

உலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செய்தி வாசிக்கும் ரோபோக்கள் : உலகிலேயே முதல் முறையாக சீனா அறிமுகம்
x
உலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி வாசிக்கும் ரோபோக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த  ரோபோக்கள், திரையில் ஓடும் எழுத்துக்களைப் படிக்கவும், செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக 2 ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 7ஆம் தேதி சீனா நடத்திய உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோக்கள் தினசரிப் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்