300 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் ஏணி...

கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இடையேயான மோதல் காரணமாக, ஜெருசலேம் தேவாலயத்தில் உள்ள ஏணி ஒன்று, கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் உள்ளது.
300 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் ஏணி...
x
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தபோது, பழைய ஜெருசலேமில் உள்ள இந்த தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தநிலையில், அந்த தேவாலயத்தில் வைக்கப்பட்ட ஏணி ஒன்று,  கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே இடத்தில் உள்ளது. அந்த தேவாலயத்திற்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிரேக்க திருச்சபை, அமெரிக்க அப்போஸ்தல திருச்சபை என ஆறு அமைப்புகள் உரிமை கொண்டாடியதால், தேவாலயம் ஆறாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. ஏணி யாரால் வைக்கப்பட்டது என்பது தெரியாததால், ஆறு அமைப்புகளைச் சேர்ந்த யாரும் அதனை நகர்த்த முன்வரவில்லை. எனினும், கடந்த 1997 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில், ஏணியை சிலர் எடுத்துச் சென்றனர். வெகுசில நாட்களில் ஏணி கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. ஏணியை அகற்றும் முயற்சிகளின் போது, பாதிரியார்களுக்கு இடையே மோதல் வெடித்ததால், அதனை எடுக்க கூடாது என அரசு அறிவுறுத்தியது. ஏணி எப்படி அங்கு சென்றது என்பதற்கு தெளிவான விளக்கங்கள் இல்லை. சீரமைப்பு பணிகளின் போது, யாராவது மறந்து அங்கேயே விட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏணியை யார் அகற்றுவது என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்