வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு 7 ஆண்டு சிறை

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு 7 ஆண்டு சிறை
x
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 73 வயதான கலீதா ஜியா, தனது பதவிக் காலத்தில் கணவரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நன்கொடை பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கலீதா ஜியாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதற்கிடையே, ஊழல் தடுப்பு ஆணையம் மூலமாக கடந்த 2011ஆம் ஆண்டு கலீதா ஜியா மீது மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜியா அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்றம்  அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

Next Story

மேலும் செய்திகள்