அமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோர் தேர்வு...

2018-ம் ஆண்டு அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோர் தேர்வு...
x
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று 2018-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. காங்கோ நாட்டை சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடி வந்தார். மேலும் போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கும் அவர் சிகிச்சை அளித்து வந்தார். ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர்.  யாஷிதி இன பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபையில் பேசி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். 

Next Story

மேலும் செய்திகள்