இந்தோனேஷிய தீவில் சுனாமி தாக்குதல் - பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் கலேவேசியா தீவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 - ஐ எட்டி உள்ளது.
இந்தோனேஷிய தீவில் சுனாமி தாக்குதல் - பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு
x
இந்தோனேஷியாவின் கலேவேசியா தீவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 - ஐ எட்டி உள்ளது. பாலு என்ற நகரில், 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலை, அங்கு வசித்த சுமார் மூன்றரை லட்சம் மக்களை தாக்கியது. இதனால்,அந்நகரம், மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது. இந்த பேரழிவில் சிக்கி, பலர் படுகாயம் அடைந்துள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தோனேஷியாவை உலுக்கிய சுனாமி தாக்குதல் நிகழ்ந்த பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்