இந்தோனேசியா தீவில் நில நடுக்கம் : ரிக்டரில் 7.5 ஆக பதிவு
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, பலு நகரை சுனாமி அலைகள் தாக்கின.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவு பகுதியில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளி 5 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு அலறியடித்த படி வெளியேறினர். இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, 6 அடிக்கும் அதிகமாக சுனாமி அலைகள் எழுந்து பலு நகரை தாக்கியதில், மசூதி உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், தரைமட்டமானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
Next Story

