"திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமல்ல" - உலக நாடுகளின் நிலை என்ன ?
"திருமண பந்தத்தை தாண்டிய தகாத உறவு" : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - உலக நாடுகளின் நிலை என்ன?
இந்த சட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிரிட்டனில் இச்சட்டம் தற்போது அமலில் இல்லை. பிரிட்டன் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் தகாத உறவை குற்றமாக பார்ப்பதில்லை. அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 17 மாகாணங்களில் மட்டும் தகாத உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் கனடாவில் இது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது.. இதை காரணமாக காட்டி, விவாகரத்து பெறும் வகையில் சட்டம் வழிசெய்கிறது. மலேசியாவிலும் தகாத உறவு குற்றமே.ஜப்பானில் தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை.. ஆனால் கணவனோ, மனைவியோ இதை காரணம் காட்டி விவகாரத்து பெறலாம். துருக்கி 1926 லும், தென்கொரியா 2015 லும் தகாத உறவை கிரிமினல் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கியது.அதே நேரத்தில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் தகாத உறவு குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனைகள் அளிக்கப்படுகிறது..
Next Story