அமெரிக்கா : வீடியோ கேமில் தோல்வியடைந்தவர் வெறிச்செயல்...

வீடியோ கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்கா : வீடியோ கேமில் தோல்வியடைந்தவர் வெறிச்செயல்...
x
அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில் நகரில் "லேண்டிங்" எனும் வணிக வளாகத்தில் வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றன. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, 'கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும்,  பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்