ஒற்றைத் தந்தத்துடன் பார்க்க வித்தியாசமாக இருக்கும் கடல்வாழ் உயிரினம்
பதிவு : ஆகஸ்ட் 20, 2018, 12:19 PM
யானைக்கு தந்தம் இருப்பது போல, ஒற்றைத் தந்தத்துடன் பார்க்க வித்தியாசமாக இருக்கும் கடல்வாழ் உயிரினத்தைப் பற்றி விளக்குகிறது இந்ததொகுப்பு...
* இவ்வுயிரின் பெயர்  narwhal அல்லது  narwhale என்பதாகும்.இதுவும் ஒருவகையான திமிங்கலமே.முன்பக்கம்  10 அடிக்கும் அதிகமாக நீண்டிருக்கும்  ஈட்டி போன்று நீண்டிருக்கும் ஒற்றை தந்தம் இவ்வுயிரினை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

* ஆர்டிக் பகுதியில் குறிப்பாக கிரீன்லாந்து,கனடா,ரஷ்யா பகுதிகளில் narwhale  கள்   வாழ்கின்றன.சாதாரணமாக 4 முதல் 5.5 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டுள்ளன.800 முதல் 1600 கிலோ எடைகொண்டுள்ளன.

* கடல்வாழ் சிறு உயிரினங்கள்,மீன்கள்,தட்டை மீன்கள் உள்ளிட்டவற்றை உண்கின்றன. கிட்டத்தட்ட 1500 மீட்டர் ஆழம் வரை சென்று வேட்டையாடும் வல்லமையை கொண்டுள்ளன.தட்டுதல்,விசில் அடித்தல் உள்ளிட்டவற்றால் சக  narwhal களுக்கு தகவல் அளிக்கின்றன
 
* 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. இவை அவ்வப்போது மேற்பரப்பிற்கு வந்து,சுவாசித்து விட்டு உள்ளே செல்லும்.ஆர்டிக் பகுதி என்பதால் கடலின் மேற்பகுதி திடீர் திடீரென பனிக்கட்டியாக உறைந்துபோகும்.அதுபோன்ற சூழலில்,உள்ளேயே சிக்கிக்கொள்ளும்  சில Narwhal கள் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்துவிடுகின்றன.

* இறைச்சி மற்றும் தந்தங்களுக்காக அதிக அளவில்  மீனவர்களால் வேட்டையாடப்படுவதால், இவற்றின் எண்ணிக்கை உலக அளவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுவிட்டது.இவற்றின் இறைச்சி அதிக சக்திவாய்ந்ததாகவும்,சுவை மிகுந்ததாகவும் உள்ளது.

 * எப்படி யானையின் தந்தம் விலைமதிப்பு மிக்கதாக இருக்கிறதோ அப்படி, Narwhal ன் தந்தமும் அதிக விலை போகக்கூடியது. இவற்றின் எலும்புகளில் கூட கலைநயமிக்க சிற்பங்களை செய்து விற்கிறார்கள்.வேகமாக அழிந்து வரும் பட்டியலில் இணைத்து இவற்றைக் காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* இருந்தபோதிலும் கனடா,கிரீன்லாந்தில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன.அதோடு பனிக்கரடிகள்,வல்ரஸ்,சுறாக்கள் உள்ளிட்டவற்றாலும் வேட்டையாடப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கனடா : பார்வையாளர்களை கவர்ந்த பனிச்சறுக்கு போட்டி

கனடாவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

18 views

"பெலாரஸ் மாடல் அழகி கைது சட்ட விரோதம்" - வழக்கறிஞர் வாதம்

ரஷ்யாவில் பெலாரஸ் மாடல் அழகி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

25 views

ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு

ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

89 views

மாஸ்கோவில் பூங்கா பார்வையாளர்களை கவர்ந்த குட்டி கொரில்லா

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்து பத்து நாட்களேயான குட்டி கொரில்லா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

44 views

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி குப்பைகளுக்கு இடையே பியானோ வாசித்த கலைஞர்

ரஷ்யாவில் உலகளாவிய மாசு பிரச்சனைகள் மீதான கவனத்தை ஈர்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த இசைக்கலைஞர் பாவெல் அண்ட்ரீவ் வித்தியாசமான முறையை அணுகியுள்ளார்

71 views

பிற செய்திகள்

ஆஸ்கருக்கு தயாராகும் அரங்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

34 views

புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.

235 views

வியாட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு

பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி வியட்நாம் நாட்டில் உள்ள ஹனாய் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திக்கவுள்ளனர்.

42 views

அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

37 views

தலாய் லாமாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

23 views

காத்மாண்டுவில் 69வது குடியரசு தின கொண்டாட்டம் : முப்படைகளின் அணிவகுப்பு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.