ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த 7 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர்,சிறுமியர் பாதிரியார்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை
x
பென்சில்வேனிய நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிரியார்கள், பிஷப்புகள், தேவாலய உயரதிகாரிகள் என பலரும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தேவாலயங்களுக்கு வரும் சிறுவர்களுக்கு ஆசை வார்த்தை கூறியும்,  மிரட்டியும்  பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியுள்ளதாக  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டதாக 300 பாதிரியார்கள் மீது அந்த அறிக்கை குற்றம் சுமத்துகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை கடந்த 1950 முதல் 1980 வரை 17 ஆயிரம் பேர் இதுபோல பாதிரியார்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபகாலமாக ஆஸ்திரியா, கனடா, ஜெர்மனி,பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும்  பாதிரியார்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருவது கிறித்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்