இளம் தலைமுறையினரை குறி வைக்கும் "மோமோ சேலஞ்ச்"

புளூ வேல் விளையாட்டின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக மோமோ சேலஞ்ச் என்ற புதிய ஆபத்து, இளம் தலைமுறையினரை குறிவைத்துள்ளது...
இளம் தலைமுறையினரை குறி வைக்கும் மோமோ சேலஞ்ச்
x
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி, ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  Blue Whale-க்கு அடுத்து , மோ மோ சேலஞ்ச் என்ற புதிய தற்கொலை விளையாட்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்டு  போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சவாலை ஏற்காதவர்கள் மன ரீதியாக மிரட்டப்படுகின்றனர். 

சவாலை ஏற்பதன் மூலம் , செல்போனில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவதுடன், தற்கொலைக்கும் தூண்டப்படுகின்றனர்.  இந்த விளையாட்டின் ஆபத்தை அறிந்து, ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளில் , விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல , வாட்ஸ் ஆப் நிறுவனமும், இது போன்ற  ஆபத்துகளில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்