அழிவின் விளிம்பில் கிங் பென்குயின்

கிங் பென் குயின்களின் எண்ணிக்கை கடந்த 35 ஆண்டுகளில், 88 சதவீதம் குறைந்து போயுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் கிங் பென்குயின்
x
* அன்டார்டிகாவிற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இங்கு, ஏறக்குறைய சுமார் 5 லட்சம் பென்குயின்கள் இருந்துள்ளன. இந்த பெங்குயின்   இனம் தான், கடந்த 35 ஆண்டுகளில் 88 சதவீதம் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 


* பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோ கிராம் எடையும் இருக்கும். இவை சிறு மீன்களையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. .இது தான், கிங்   பென்குயின் என்றழைக்கப்படுகிறது...  பென்குயின் இனங்களிலேயே, இரண்டாவது பெரிய பென்குயின் இனமாக கருதப்படுகிறது. 


* ஆப்பிரிக்காவுக்கும் அன்டார்டிகாவுக்கும் இடையில் உள்ள தீவுகளில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பென்குயின் இனப்பெருக்கம் குறித்து செயற்கைக்கோள்   தகவல்கள் மற்றும் ஹெலிகாஃப்டரில் எடுத்த புகைப்படங்கள் வழியாக ஆய்வு நடத்தினர். 

* செயற்கைக்கோள் புகைப்படங்கள் விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் தீவு முழுவதும் ஆட்கொண்டிருந்த அரசப் பென்குயின்களின் எண்ணிக்கை பல   மடங்காகக் குறைந்திருந்தது. தற்போது பென்குயின்களின் எண்ணிக்கை, சுமார் 60 ஆயிரம் தான் இருக்குமாம்.

`* கடந்த 35 ஆண்டுகளில் கிங் பென்குயின் இனம் இத்தனை பெரிய பேரிழப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை' என்று சூழலியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.   முக்கியமாக, 1997-ம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ என்னும் புவியியல் நிகழ்வால் பென்குயின் இனம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 

* புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம், நோய்த் தொற்று , சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் கிங் பென்குயின்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள்   குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வு குறித்த விரிவான கட்டுரை ''அன்டார்டிக் சயின்ஸ்'' என்னும் அறிவியல் சார்ந்த இதழில் வெளியாகியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்