உகாண்டா அதிபருடன் மோடி முக்கிய ஆலோசனை

இந்தியா - உகாண்டா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
உகாண்டா அதிபருடன் மோடி முக்கிய ஆலோசனை
x
ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி ருவாண்டா நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு உகாண்டா நாட்டுக்கு சென்றார். அவருக்கு பராம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உகாண்டா அதிபர் யூவரி முஸ்வேனியை (Yoweri Museveni)மோடி சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி, கம்பாலா புற்றுநோய் மருத்துவமனைக்கு நவீன புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.  பின்னர் கம்பாலாவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்த மோடி, இந்திய வம்சாவளி மக்களிடம் உரையாற்றினார்..


Next Story

மேலும் செய்திகள்