அமெரிக்காவில் நகர நீச்சல் குளத்தில் குளியல் போட்ட காட்டு கரடி
வெப்பம் அதிகரிப்பால் தவிக்கும் வன விலங்குகள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், காட்டுக்குள் இருந்த கரடி ஒன்று, நகருக்குள் புகுந்து அங்கிருந்த நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளியல் போட்டது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் கோடை காலம் என்பதால் 32 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகும் நிலையில், வெப்பத்தை தணிக்க நீச்சல் குளத்துக்குள் குளியல் போட்ட காட்டு கரடியை வனத் துறையினர் மீட்டனர்.
Next Story