புகைப்பழக்கத்தால் உயிரை விட்ட பிரபலங்கள் - ஒரு பார்வை

தமிழகத்தில் புகைப்பிடிக்கும் விவகாரம் மீண்டும் பெரிதாகியுள்ள நிலையில், புகை பிடிக்கும் பழக்கத்தால், உயிரை விட்ட பிரபலங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
புகைப்பழக்கத்தால் உயிரை விட்ட பிரபலங்கள் - ஒரு பார்வை
x
எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், திரைப்பட கதாநாயகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளை வைக்கத் தான் வற்புறுத்துகின்றனர்... 

புகை பிடிப்பதை, ஸ்டைல் என்றும் மேல்தட்டு வர்க்கத்தின் கௌரவம் என்றும் காரணம் கூறி, பலரும் தப்பித்து விடுகின்றனர். திரைப்படங்களில்,  புகை பிடிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாக மாறி விடுகிறது. புகை பிடித்து,  சமூகத்தைக் கெடுக்கின்றனர் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 

உலகளவில் புகைப் பழக்கத்திற்கு அடிமையான ஏராளமான பிரபலங்கள் உண்டு. அதில், சிலர் உயிரையும் மாய்த்துள்ளனர்... 

உலகத்திற்கே பரிச்சயமான ஸ்டைல் ஹீரோவான, ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன்  Roger-Moore, படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும், புகைத்துக்கொண்டே இருப்பார். இதன் விளைவாக நுரையீரல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இறுதியில், prostate cancerரால் அவர் உயிரிழந்தார். 

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பலரும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அரசரான ஏழாம் எட்வர்டு புகை பிடிப்பதை ஸ்டைல் என நம்பினார். ஒரு நாளைக்கு, இவர் 32 சிகரெட்டுகளை ஊதித் தள்ளுவாராம். இதனால், இவர் தமது 69வது வயதில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு  இறந்தார்.

இங்கிலாந்தின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் 1936 ஆம் ஆண்டு இறந்தார். எண்ணற்ற நுரையீரல் நோய்களால் அவதிப்பட்ட இவர், இறக்கும் வரையிலும் கூட புகையை விடவே இல்லை. 

ஐந்தாம் ஜார்ஜின் மகனான எட்டாம் எட்வர்டும் புகைக்கு பலியானவர்தான். குரல்வளையில் ஏற்பட்ட புற்று நோயால், இவர் மிகவும் அவதிப்பட்டு இறந்தார்.

எட்டாம் எட்வர்டின் சகோதரரான ஆறாம் ஜார்ஜும் கூட சிகரெட் என்றால் உயிரை விடுவார். இவரும் சிகரெட்டால் தான் உயிரை விட்டார். 56 நுரையீரல் புற்றுநோய் இவரை பலி வாங்கிவிட்டது.

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்திருக்கும் பெயர் Walt Disney. இன்றைய டிஸ்னி பிக்சர்ஸின், பிதா மகன். மிக்கி  மவுஸ் கதாபாத்திரத்தை உருவாக்கி கார்டூன் புரட்சி செய்தவர். இவரும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்.  கடைசியில் அந்தப் புகை,  நுரையீரல் புற்று நோய் மூலம் அவர் உயிரைப் பறித்தது. 

''புகை பிடித்தல் புற்று நோயை உருவாக்கும் உயிரைக் கொல்லும்'' என அனைத்து திரையரங்குகளிலும், நிச்சயம் காண்பிக்கின்றனர். புகைக்கும் காட்சிகள் வந்தால், திரை ஓரத்தில் எச்சரிக்கை வாக்கியம் வைக்கப்படுகிறது. 

ஆனாலும்,  புகை பகை தான் என்பதை உணர வேண்டும்...


Next Story

மேலும் செய்திகள்