இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கு தண்டனை

இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கு தண்டனை நடைமுறைக்கு வருகிறது.
இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கு தண்டனை
x
இலங்கையில் கடந்த 1976ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியன்று கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, தூக்கு தண்டனை அளித்தாலும் நிறைவேற்றியதில்லை. தற்போது, ஆயிரம் தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் 950 பேர் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து 3 கொலைகள் நடந்துள்ளன. 160 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்டனை கைதிகளும் சிறையில் இருந்தபடியே, குற்றத்துக்கு காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அதிபர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 19 கைதிகளை தூக்கிலிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றி, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித்ததும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடங்கும் என அமைச்சர் ரஜித சேனாரத்னா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்