மரண கடல் குறித்த ஆச்சர்ய தகவல்கள்...

இப்படியும் ஒரு கடல் இருக்கிறதா என ஆச்சரியப்படுத்தும் அதிசய கடல் இது...
மரண கடல் குறித்த ஆச்சர்ய தகவல்கள்...
x
மரண கடல் குறித்த ஆச்சர்ய தகவல்கள்



சாக்கடல் என அழைக்கப்படும் Dead Sea,  இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே, ஒரு ஏரி போல விரிந்திருக்கிறது. இந்த கடலில், உயிரினங்கள் வாழ முடியாது என்பதால், இது சாக்கடல் அல்லது இறந்த கடல் என அழைக்கப்படுகிறது. இந்தக் குட்டிக் கடலை, சாக்கடல் என அழைக்கிறார்களே தவிர, இந்தக் கடலில் விழுந்து யாராலும் சாக முடியாது. காரணம், அதிசயம், ஆச்சரியம் தான். 



இந்தக் கடல் எந்தப் பொருளையும் மூழ்கடிப்பதில்லை. மிதக்கச் செய்கிறது. நீச்சலே தெரியாதவர்கள், இந்தக் கடலில் இறங்கினால் கூட, பஞ்சு மெத்தையில் படுத்தது போல மிதந்து விடுவார்கள். சாதாரண, நீச்சல் குளத்தில் அடி ஆழத்திற்குப் போகும் பவுலிங் பந்து கூட இந்தக் கடலில் மிதக்கிறது. கல்லைக்கட்டிக் கொண்டு குதித்தாலும், நீருக்குள் இழுக்காத வித்தியாச கடல் இது. 

சாதாரண கடல் நீரைவிட இந்தக் கடல் நீர், 8 மடங்கு அதிக உப்புத்தன்மை கொண்டது. இவ்வளவு உப்பில் மீன் உட்பட எந்த உயிரினமும் வாழாது. அதனால்தான் இது, ''டெட் ஸீ'' ?(Dead Sea) எனப் பெயர் பெற்றது. மனிதர்களை மிதக்க வைப்பது மட்டுமின்றி, நோய்களை குணப்படுத்தும் சக்தி, இந்த கடல் நீருக்கு உண்டு. இயற்கையான கிருமிநாசினியான உப்பு கலந்திருப்பதால் இந்தக் கடலின் அடியில் படிந்துள்ள சேறுகளை அள்ளி, சந்தனம் போலப் பூசிக் கொண்டு, சுற்றுலா பயணிகள் குளிக்கிறார்கள். 



Next Story

மேலும் செய்திகள்