பெண்களைப் போன்று கூந்தல் இருக்கும் ப்ரீசியன் குதிரைகள்

நெதர்லாந்தை தாயகமாகக் கொண்ட ப்ரீசியன் குதிரைகள் பிற குதிரைகளில் இருந்து வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன... அது குறித்த ஒரு தொகுப்பு
பெண்களைப் போன்று கூந்தல் இருக்கும் ப்ரீசியன் குதிரைகள்
x
குதிரைகளில் பல வகைகளில் இருந்தாலும், Friesian குதிரைகளின் அழகே தனிதான்..

பார்க்க கரு கருவென மினுமினுப்புடன் இருக்கும்.. பெண்களின் கூந்தலைப் போல இந்த குதிரைக்கும் அழகான கூந்தல் இருக்கிறது...

வேகமாக ஓடும் பொழுது, இந்த கூந்தல் காற்றில் பறக்கும் அழகு, எப்படிப்பட்டவரையும் ஈர்த்துவிடும்....

 இவ்வகை குதிரைகளின் தாயகம், நெதர்லாந்தில் உள்ள Friesland ஆகும்..  இப்போது புரிகிறதா இந்த குதிரைக்கு ஏன் Friesian என பெயர் வந்தது என்று?


அதிவேகமாக ஓடும் என்பதாலும், அதிக வலு மிகுந்தது என்பதாலும், உயரம் நீளத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் என்பதாலும் போர்களில் இக்குதிரைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன...  

பல ஐரோப்பிய போர்களை Friesian குதிரைகள் இல்லாமல் வரையறுக்கவே முடியாது..

சிலர் இக்குதிரைகளை பெல்ஜியம் கருப்பர்கள் எனவும் அழைக்கிறார்கள்..
 

அக்காலத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இக்குதிரைகள் மத்திய காலத்தில் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.. தற்போது ரேஸ், கேளிக்கை நிகழ்ச்சிகள்  உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றன..  

இளம்பெண்கள் இக்குதிரைகளில் சவாரி செய்யவும், அதன் மீது ஏறி அமர்ந்து புகைப்படம் எடுததுக்கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்...

நெதர்லாந்தில் இருக்கும் மொத்த குதிரைகளில் எண்ணிக்கையில் 7 சதவிகிதம் தான் Friesian வகையை சேர்ந்தவை.  திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் Friesian குதிரைகளை பயன்படுத்த இயக்குநர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்....

Next Story

மேலும் செய்திகள்